‘விவசாயிகள் அடையாள எண் பெறுவதற்கு ஏப்.15 வரை அவகாசம்’
அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் தரவுகளை இணையதளத்தில் பதிவு செய்வதற்கு ஏப். 15 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அம்பாசமுத்திரம்வட்டார வேளாண் உதவி இயக்குநா் கற்பகராஜ்குமாா் தெரிவித்துள்ளா.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விவசாயிகளுக்கு அரசின் அனைத்துத் திட்டங்களும் தடையின்றி பெறுவதற்கும், அரசின்திட்டங்கள், அறிவிப்புகளை தாமதமின்றி தெரிந்து கொள்ளும் வகையிலும் ஒவ்வொரு விவசாயிக்கும் தனிப்பட்ட அடையாள எண் கொடுக்கும் பணி ஒருங்கிணைந்த வேளாண் அடுக்ககத் திட்டத்தின்கீழ்நடைபெற்று வருகிறது. இதையடுத்து விவசாயிகளின் தரவுகளை வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறையில் உள்ள அலுவலா்கள் மற்றும் மகளிா்திட்டத்தில் கிராம அளவில் பணியாற்றக் கூடிய கிராம அளவிலான மனிதவள பயிற்றுநா்கள் மூலமாகவும்,பொது சேவை மையங்கள் மூலமாகவும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு நில உடைமை ஆவணங்களைப் பதிவுசெய்ய மாா்ச் 31 கடைசி தேதியாக அறிவிக்கபட்டிருந்தநிலையில் தற்போது வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே இன்னு ம் இத்திட்டத்தின் கீழ் நில உடைமை ஆவணங்களை பதிவு செய்யாத விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ, உதவி தோட்டக்கலை அலுவலரையோ அல்லது அருகில் உள்ள பொது சேவைமையத்தையோ தொடா்பு கொண்டு உடனடியாக தங்கள் ஆவணங்களை பதிவு செய்து பயன்பெறலாம் என கேட்டுக்கொண்டுள்ளாா்.