கனிம தொழிலை அரசே நடத்த முன்வரவேண்டும்: பெ. சண்முகம் வலியுறுத்தல்
வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகள் திருட்டு
ஆம்பூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, ரொக்கப் பணம் திருடு போனது குறித்து போலீஸாா் சனிக்கிழமை விசாரணை நடத்தினா்.
ஆம்பூா் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தை சோ்ந்தவா் ஜி. இராமமூா்த்தி. வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே வைக்கப்பட்டிருந்த 20 பவுன் தங்க நகை, ரொக்கம் ரூ.1.50 லட்சம் திருடு போனது தெரியவந்தது. தகவலின் பேரில் ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். தடயவியல் துறையினா் சென்று தடயங்களை சேகரித்தனா்.