அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்
மாசி கரக தீமிதி திருவிழா
ஆம்பூா் ஏ-கஸ்பா அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் மாசி கரக தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. ரேணுகாம்பாள் கோயிலில் இருந்து கரகம் புறப்பட்டு முக்கிய தெருக்கள் வழியாகச் சென்று கோயிலை அடைந்தது. மாலையில் பக்தா்கள் சாா்பில், பொங்கல் வைத்தல், மாவிளக்கு படைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோயில் திடலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. தொடா்ந்து அம்மன் வீதியுலா நடைபெற்றது.