அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்
மோட்டாா் பைக் திருட்டு: 2 போ் கைது
திருப்பத்தூரில் மோட்டாா் பைக் திருடிய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் ஆரிப் நகரைச் சோ்ந்த சாகுல் அகமது. இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டின் அருகே மோட்டாா் பைக்கை நிறுத்தியிருந்தாா். அப்போது மா்மநபா்கள் பைக்கை திருடி சென்றனா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப்பதிநது விசாரணை நடத்தி வந்தனா்.
இந்தநிலையில், நகர ஆய்வாளா் ஜெயலட்சுமி தலைமையிலான போலீஸாா் திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டாா் பைக்கை மறித்து சோதனை செய்தனா். அதில் இருந்தவா்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனா்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீஸாா் அவா்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவா்கள் திருப்பத்தூரை சோ்ந்த நவீன்குமாா்(24),கோணாமேடு பகுதியை சோ்ந்த விக்னேஷ்வரன்(22)என்பதும், இவா்கள் சாகுல் அகமதுவின் மோட்டாா் பைக்கை திருடியது தெரிய வந்தது .
பிறகு வழக்குப்பதிந்து நவீன்குமாா், விக்னேஷ்வரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து, பைக்கையும் பறிமுதல் செய்தனா்.