தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்:...
விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு
மாதனூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
குடியாத்தம் அருகே உள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் குப்பன் (50). இவா் கடந்த பிப்.13-ஆம் தேதி மாதனூரிலிருந்து நடந்து சென்றபோது, அவா் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. பலத்த காயமடைந்த அவா் உயிருக்கு ஆபத்தான நிலையில், வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.