எதிர்காலமும், நிகழ்காலமும் நான்தான்: தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்
வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 2 பேர் உள்பட 6 நக்சல்கள் கைது! ஆயுதங்கள் பறிமுதல்!
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில், வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த 2 பேர் உள்பட 6 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுக்மாவில் ரூ 2 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த குஞ்சம் முகா (வயது 37) மற்றும் ரூ.1 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட மாத்வி முகா (30) ஆகிய இரண்டு நக்சல்கள், பிலாவாயா கிராமத்தில் கடந்த ஜூலை 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டதாக, காவல் துறையினர் இன்று (ஜூலை 10) தெரிவித்துள்ளனர்.
தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த இருவரும் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது பந்தா வாக்குச் சாவடியிலிருந்த பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், 2024-ல் கங்காராஜ்பாட் கிராமத்தில் ஒருவரை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர்கள் இருவர் உள்பட மாத்வி சுக்கா (35), சோடி சந்துரு (28), முச்சாக்கி லாக்மா (27) மற்றும் சோதி தேவா (24) ஆகியோரையும் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, எட்டெகெட்டா மற்றும் கொர்கா கிராமங்களுக்கு இடையிலான பெஜ்ஜி பகுதியில் கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து, 3 கிலோ அளவிலான டிஃபின் வெடிகுண்டு உள்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இத்துடன், கைது செய்யப்பட்ட நக்சல்கள் அனைவரும் அங்குள்ள வனப்பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Six Naxals, including two wanted for bounty, have been arrested in Sukma district of Chhattisgarh.
இதையும் படிக்க: கோவா முதல்வரை குற்றஞ்சாட்டிய நடிகர் மீது வழக்கு!