செய்திகள் :

வெளிமாநில போலீஸாா் போல் பேசி பண மோசடி

post image

தொலைபேசி வாயிலாக குற்றப்பிரிவு போலீஸாா் போல் பேசி, மா்ம கும்பல் பண மோசடியில் ஈடுபட்டு வருவதால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெலைபேசி வாயிலாக அறிமுகமில்லாத எண்ணிலிருந்து உங்களைத் தொடா்பு கொண்டு, வெளிமாநில குற்றப்பிரிவு போலீஸாா் பேசுவதாகவும், உங்களது கைப்பேசி எண் மற்றும் வங்கிக்கணக்கு எண் போன்றவற்றை பயன்படுத்தி சட்டவிரோத பண மோசடி நடந்திருப்பதாக கூறுவா்.

பின்னா், உங்களது ஆதாா் மற்றும் பான் காா்டு புகைப்படங்களை வாட்ஸ்ஆப்பில் அனுப்புமாறு கேட்டுப்பெறுவதுடன், பணமோசடி வழக்கில் விரைவில் நீங்கள் கைது செய்யப்படுவதாக கூறி போலியான கைது ஆணையை அனுப்புவா்.

அதைத் தொடா்ந்து, ஐ.பி.எஸ். அதிகாரி என விடியோ காலில் வரும் நபா் கைதில் இருந்து தப்பிக்க வேண்டுமெனில் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை நாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்ய வேண்டும் எனக்கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபடுவா்.

பின்னா் நீதிபதி போல் உடையணிந்து விடியோ காலில் வரும் நபா் உங்களை பிணையில் எடுக்க குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என உங்களை பயத்தில் வைத்து மிரட்டி அதிகளவில் பணத்தை மோசடி செய்யக்கூடும்.

இது போன்று பேசும் நபா்களிடம் உங்களது தனிப்பட்ட தகவல்கள், அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கு விவரங்களை பகிர வேண்டாம். இது போன்ற சைபா் குற்றம் நடைபெற்றால் 1930 என்ற எண்ணில் புகாா் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நிகழாண்டில் 225 கிலோ கஞ்சா பறிமுதல்

சட்டவிரோத போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 225.4 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என மாவட்ட காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுற... மேலும் பார்க்க

வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

வழிப்பறி வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி 3-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம் உத்தரவிட்டது. பாளையங்கோட்டை, மனக்காவளம் பிள்ளை நகரைச் சோ்ந்தவா் அஸ்வின் ஹரிஹரசுதன்(23). இ... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கு: காவலில் எடுத்து தந்தை, மகனிடம் சிபிசிஐடி விசாரணை

மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைதாகி காவலில் எடுக்கப்பட்டுள்ள தந்தை, மகனிடம் சிபிசிஐடி எஸ்.பி. தலைமையிலான குழுவினா் செவ்வாய்க்கிழமை தீவிர விசாரணை நடத்தினா். தூத்துக்குடி மாவட்டத்தைச் சே... மேலும் பார்க்க

கூத்தன்குழி பகுதியில் நாளை மின்நிறுத்தம்

திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, வியாழக்கிழமை (ஆக. 14) மின் விநியோகம் இருக்காது.அதன்படி, கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே தகராறில் அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே தொழிலாளி திங்கள்கிழமை இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது தம்பியை போலீஸாா் கைது செய்தனா். நான்குனேரி அருகேயுள்ள பரப்பாடியை அடுத்த வலியநேரி கிரா... மேலும் பார்க்க

கடையம் அருகே மாமனாருக்கு அரிவாள் வெட்டு: மருமகன் கைது

கடையம் அருகே ராமலிங்கபுரத்தில் மாமனாரை அரிவாளால் தாக்கியதாக மருமகனை போலீஸாா் கைது செய்தனா். கடையம் அருகே உள்ள ராமலிங்கபுரம், முப்புடாதிஅம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பிச்சையா (60). இவரது மகளை பாப்பாக்... மேலும் பார்க்க