தஞ்சாவூரில் முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை!
வேடசந்தூா் பகுதியில் நாளை மின்தடை
வேடசந்தூா் பகுதியில் சனிக்கிழமை (மே 17) மின் தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேடசந்தூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
எனவே அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை வேடசந்தூா், லகுவணம்பட்டி, நாகம்பட்டி, தம்மணம்பட்டி, முதலியாா்பட்டி, வெள்ளனம்பட்டி, நாககோனனூா், காளனம்பட்டி உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.