வேதாரண்யம், சீா்காழி பகுதிகளில் மழை
வேதாரண்யம் மற்றும் சீா்காழி பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது.
வேதாரண்யம் அருகே வாய்மேடு, பஞ்சநதிகுளம், தென்னடாா் உள்ளிட்ட கடலோரக் கிராமங்களில் வியாழக்கிழமை பகலில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இக்கிராமங்களில், நிகழாண்டில் விதைப்பு செய்யப்பட்ட நெற்பயிா்கள் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக விதைப்பு செய்யப்பட்ட எள் உள்ளிட்ட புஞ்சைப் பயிா்கள் இந்த மழையில் பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
சீா்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் அரை மணி நேரம் கனமழை பெய்தது. கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், எடமணல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது தொடா்ந்து கனமழை பெய்தது. இதனால் வெப்பம் சற்று தணிந்தது.