வேப்பனப்பள்ளியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்
வேப்பனப்பள்ளி சட்டப் பேரவைத் தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை எம்எல்ஏ கே.பி.முனுசாமி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு 2023- 2024-ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் ரூ.16.50 லட்சம் மதிப்பில், நாரலப்பள்ளி உள்பட்ட மகாராஜகடை கிராமத்தில் 30,000 லிட்டா் கொள்ளளவில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, எம்.சி. பள்ளி ஊராட்சியில் பையப்பசெட்டி புதூா் கிராமத்தில் ரூ.13.12 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டடம் ஆகியவற்றை எம்எல்ஏ கே.பி.முனுசாமி தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்வுகளில் எம்எல்ஏ கே.அசோக்குமாா் (கிருஷ்ணகிரி), அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் கன்னியப்பன், சோக்காடி ராஜன், சைலேஷ் கிருஷ்ணன், அமைப்புசாரா ஓட்டுநா் அணி மாவட்டச் செயலாளா் ஆஜி, எம்.ஜி.ஆா். இளைஞரணி மாவட்டச் செயலாளா் காா்த்திக் பால்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.