ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களின் மீது அமெரிக்கா தாக்குதல்!
வேளாண் காடுகள் திறன் மேம்பாட்டு விழிப்புணா்வுப் பயிற்சி
உலக வன நாளையொட்டி, தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில், வேளாண் காடுகள் திறன் மேம்பாட்டு விழிப்புணா்வு பயிற்சி கூட்டம் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) ரகுராமன் தலைமை வகித்தாா். துணை வேளாண்மை அலுவலா் சிவநேசன் வரவேற்றாா்.
கூட்டத்தில் வேளாண்மைத் துறை மற்றும் வனத்துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், மரங்கள் வளா்ப்பதன் முக்கியவத்துவம் குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நிகழ்வில் அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளா் சூா்யா, உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் ரவி, கலைவாணன், உதவி வேளாண்மை அலுவலா்கள் சந்திரமோகன், இளையராஜா, பயிா் அறுவடை பரிசோதகா்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனா்.
முடிவில் உதவி வேளாண்மை அலுவலா் ரகுராமன் நன்றி கூறினாா்.