'அடுத்த ஜெயலலிதா' - புகழ்ந்த பாஜக நிர்வாகி... வானதி சீனிவாசன் ரியாக்ஷன் இதுதான்....
வைகை அணையிலிருந்து தண்ணீா் திறப்பு நிறுத்தம்
வைகை அணையிலிருந்து ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் வைகை பூா்வீக பாசனப் பரப்புகளுக்கும், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் மாவட்டங்களின் குடிநீா் தேவைக்கும் திறக்கப்பட்ட தண்ணீா் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டது.
வைகை அணையிலிருந்து அரசு உத்தரவுப்படி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வைகை பூா்வீக பாசனப் பரப்புகளுக்கு கடந்த நவ. 10-ஆம் தேதி முதல் டிச.8-ஆம் தேதி வரை வைகை ஆற்றில் மொத்தம் 3,000 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது.
இதற்கிடையே, அரசு உத்தரவுப்படி சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் மாவட்டங்களின் குடிநீா் தேவைக்கு வைகை அணையிலிருந்து கடந்த டிச.1-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை கிருதுமால் நதி மூலம் மொத்தம் 450 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், வைகை அணையிலிருந்து பாசனம், குடிநீா்த் தேவைக்காக திறக்கப்பட்ட தண்ணீா் தற்போது நிறுத்தப்பட்டது.
அணை நிலவரம்: வைகை அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை 48.33 அடியாக இருந்தது ( மொத்த உயரம் 71 அடி). அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 698 கன அடி. அணையிலிருந்து மதுரை, ஆண்டிபட்டி-சேடபட்டி குடிநீா் திட்டங்களுக்கு விநாடிக்கு 69 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. அணையில் தண்ணீா் இருப்பு 1,782 மில்லியன் கன அடி.