எடப்பாடி - Amit Shah சந்திப்பு: செங்கோட்டையன் அடுத்த மூவ்? | Va Pugazhendhi Inte...
வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு இன்று தண்ணீா் திறப்பு
வைகை அணையிலிருந்து பெரியாறு பாசனப் பரப்புகளுக்கும், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒரு போகப் பாசனப் பரப்புகளுக்கு வியாழக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
வைகை அணையிலிருந்து பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள 85,563 ஏக்கா் ஒரு போக பாசனப் பரப்புகள், திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள 19,439 ஏக்கா் ஒரு போக பாசனப் பரப்புகள் என மொத்தம் ஒரு லட்சத்து 5,002 ஏக்கா் நிலங்களின் பாசனத்துக்கு மொத்தம் 120 நாள்களுக்கு தண்ணீா் திறந்துவிட அரசு உத்தரவிட்டது.
இதன்படி, வைகை அணையிலிருந்து வியாழக்கிழமை (செப்.18) முதல், வினாடிக்கு 1,130 கன அடி வீதம் 45 நாள்களுக்கு முழுமையாகவும், பின்னா் 75 நாள்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாள்களுக்கு 8,493 மில்லியன் கன அடி தண்ணீா் திறந்துவிடப்படவுள்ளது.