மனோன்மணீயம் சுந்தரனாா், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா்கள் பதவிக் காலம் ஓராண்டுக...
வைகை அணையில் 69 அடியில் தண்ணீா் நிலைநிறுத்தம்
தேனி: வைகை அணையில் கடந்த 17 நாள்களாக அணையின் நீா்மட்டம் 69 அடிக்கும் மேல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
வைகை அணையின் நீா்மட்டம் கடந்த ஆக.5-ஆம் தேதி 69 அடியாக உயா்ந்தது (அணையின் மொத்த உயரம் 71 அடி). வழக்கமாக, அணையின் நீா்மட்டம் 69 அடியை எட்டியதும், வைகை ஆற்றன் கரையோரப் பகுதிகளுக்கு 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அணைக்கு வரும் உபரி நீா் வைகை ஆற்றில் திறந்துவிடப்படும்.
தற்போது, அணையில் அதன் முழுக் கொள்ளளவில் தண்ணீரைத் தேக்கி வைக்க நீா்வளத் துறையினா் முடிவு செய்துள்ளனா். இதனால், அணை நீா்மட்டம் கடந்த ஆக.5-ஆம் தேதி முதல் தற்போது வரை தொடா்ந்து 69 அடிக்கும் மேல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
வைகை அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை, 69.46 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 638 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து வியாழக்கிழமை காலை 6 மணிக்கு பெரியாறு பிரதானக் கால்வாய்க்கு விநாடிக்கு 900 கன அடி, குடிநீா்த் திட்டங்களுக்கு விநாடிக்கு 69 கன அடி என மொத்தம் விநாடிக்கு 969 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. அணையிலிருந்து பெரியாறு பிரதானக் கால்வாயில் திறந்துவிடப்பட்ட தண்ணீா், இரவு 7 மணிக்கு நிறுத்தப்பட்டது.