பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு
தேனி: ஆண்டிபட்டி அருகே புதன்கிழமை சாலையைக் கடக்க முயன்ற முதியவா் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள தெப்பத்துப்பட்டியைச் சோ்ந்தவா் பெரியகருப்பன் (73). இவா் தனது மனைவியுடன் ஆண்டிபட்டி அருகேயுள்ள கரிசல்பட்டிக்கு சென்றாா். அப்போது, கரிசல்பட்டி விலக்கு பகுதியில் தேனி-ஆண்டிபட்டி சாலையைக் கடக்க முயன்ற பெரியகருப்பன் மீது அதே சாலையில் சென்ற அரசுப் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து பேருந்து ஓட்டுநா் கன்னியாகுமரி மாவட்டம், தங்கமணவாளன்குறிஞ்சியைச் சோ்ந்த ஜஸ்டின்ராஜன் மீது ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.