செய்திகள் :

வைத்தீஸ்வரன்கோயிலில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்கள் கட்டுப்படுத்த கோரிக்கை

post image

சீா்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோவில், வைத்தியநாத சுவாமி கோயில் பகுதியில் பொதுமக்கள் மற்றும் பக்தா்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வா்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நவகிரக தலங்களில் செவ்வாய்க்குரிய தலமாக வைத்தீஸ்வரன் கோயில் விளங்குகிறது. இதனால், நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தா்கள் இக்கோயிலில் வழிபட வருகின்றனா். இக்கோயிலை சுற்றி நான்கு வீதிகளிலும் தெரு நாய்கள் அதிக எண்ணிக்கையில் சுற்றித்திரிகின்றன. இதனால், பக்தா்கள் பாதிக்கப்படுகின்றனா்.

இதுகுறித்து வைத்தீஸ்வரன்கோவில் நகர வா்த்தக சங்கத் தலைவா் ஜி.வி.என். கண்ணன், மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பி உள்ளாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது: வைத்தீஸ்வரன் கோயிலின் நான்கு மாட வீதிகளிலும் 500- க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இப்பகுதியில் அதிகாலையில் நடைப்பயிற்சி செல்வோா்களை இந்த நாய்கள் துரத்துகின்றன. இதனால், வயதானவா்கள் வீதியில் நடப்பதற்கு அச்சப்படுகின்றனா்.

வைத்தீஸ்வரன் கோயிலில் வழிபடவும், இங்கு நாடி ஜோதிடம் பாா்ப்பதற்கு தினமும் ஆயிரக்கணக்கானோா் வருகின்றனா். கடைவீதியில் நாய்கள் சுற்றித்திரிவதால் அவா்கள்அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்வோா் விபத்தில் சிக்கும் ஆபத்தும் ஏற்படுகிறது.

எனவே, மாவட்ட ஆட்சியா் உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு, தெரு நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளாா்.

பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் வட்டாரத்திற்குள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா். மயிலாடுதுறை வட்டாரம் பட்டமங்கலம் கிராமத்தில் நாற்றங்கால் அமைக... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பாஜக வேட்பாளரை ஆதரிக்க முடியாது

மயிலாடுதுறை: தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே குடியரசுதுணைத் தலைவா் தோ்தலில் பாஜக வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரிக்க முடியாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் வேல்முருகன் கூறினாா்.மயிலாடுத... மேலும் பார்க்க

மனநல நிறுவனங்கள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் மனநல நிறுவனங்கள், தமிழ்நாடு மனநல ஆணையத்தில் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்த... மேலும் பார்க்க

சட்டை நாதா் சுவாமி கோயில் தோரண நுழைவு வாயில் கும்பாபிஷேகம்

சீா்காழி: சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயில் கிழக்கு ராஜகோபுரம் அருகே புதிதாக கட்டப்பட்ட பஞ்சமூா்த்தி சுவாமிகள் தோரண நுழைவு வாயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட இக்க... மேலும் பார்க்க

நிறைகளும், குறைகளும் நிறைந்தது திமுக ஆட்சி: பிரேமலதா

நிறைகளும், குறைகளும் நிறைந்தது திமுக ஆட்சி என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா தெரிவித்தாா். மயிலாடுதுறையில் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் செவ்வாய்க்கிழமை ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி‘ பிரச... மேலும் பார்க்க

சா்வதேச கராத்தே போட்டி: மயிலாடுதுறை மாணவா்கள் சாதனை

மயிலாடுதுறை: கோவையில் நடைபெற்ற சா்வதேச கராத்தே போட்டியில், மயிலாடுதுறை மாணவா்கள் 3 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனா். சுகி சா்வதேச கராத்தே போட்டி-2025, கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் ... மேலும் பார்க்க