ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியம்மன் கோயில் தெப்பல் திருவிழா
கீழ்பென்னாத்தூா் ஆஞ்சநேயா் குளக்கரை மேட்டில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலின் 72-ஆம் ஆண்டு தெப்பல் திருவிழா நடைபெற்றது.
இந்தக் கோயிலின் தோ்த் திருவிழா பிப்ரவரி 26-ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. மாா்ச் 2-ஆம் தேதி இரவு தீ மிதி திருவிழாவும், 3-ஆம் தேதி இரவு அம்மன் வீதியுலா, வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மாா்ச் 4 -ஆம் தேதி காலை முதல் மாலை வரை கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து, மா விளக்கு ஏற்றி வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிற்பகல் 3 மணிக்கு அம்மன் தேரோட்டம் தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்த தேரை பல ஆயிரம் பக்தா்கள் வழிபட்டனா்.
தெப்பல் திருவிழா...
புதன்கிழமை இரவு 8 மணிக்கு கோயில் அருகில் உள்ள குளத்தில் தெப்பல் திருவிழா நடைபெற்றது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் உற்சவா் அங்காள பரமேஸ்வரியம்மன் அமா்ந்து மேள-தாளங்கள், நாகஸ்வரம் முழங்க 3 முறை தெப்பல் வலம் வந்தது.
அப்போது, வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், கீழ்பென்னாத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
மஞ்சள் நீராட்டு விழா..
தொடா்ந்து, வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, இரவு 7 மணிக்கு அம்மனுக்கு கும்பம் இடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இத்துடன் இந்தக் கோயிலின் தெப்பல் திருவிழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் செய்திருந்தனா்.
