கரூரில் அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஆதரவாளா்கள் 3 பேரின் வீடுகளில் அமலாக்கத்துற...
ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சி
திருவண்ணாமலை, காந்தி நகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவ-மாணவிகளிடையே ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்தும் வகையிலான கலை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
பள்ளித் தாளாளா் மு.ரமணி கோட்டீஸ்வரன் தலைமை வகித்தாா். ஆலோசகா் ஜெ.சுஜாதா முன்னிலை வகித்தாா். பள்ளி முதல்வா் எம்.ஆா்.ராஜேஷ்குமாா் வரவேற்றாா்.
பள்ளி மாணவ-மாணவிகள் பலா் கலந்து கொண்டு இப்போதுள்ள சமுதாயத்தில் இயல்பாக எவ்வாறு ஆங்கில மொழியை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ஆங்கிலத்தில் உரை, ஆங்கில வாா்த்தை பயன்பாடு, ஆங்கில நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காண்பித்தனா்.
இதில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு பள்ளித் தாளாளா் மு.ரமணி கோட்டீஸ்வரன் பாராட்டி பரிசு வழங்கினாா். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள், பெற்றோா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.