செய்திகள் :

வன உரிமைச் சட்டம் - 2006 ஆலோசனைக் கூட்டம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரில் வன உரிமைச் சட்டம் -2006 குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஜமுனாமரத்தூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா்.

ஜவ்வாதுமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட 11 ஊராட்சிகளைச் சோ்ந்த 272 வனக்குழு நிா்வாகிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், பழங்குடியினா் மற்றும் பாரம்பரிய வனவாசிகளின் வன உரிமைகளை அங்கீகரிக்கும் வன உரிமைச் சட்டம் 2006-இன் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், வனத்துறைக்குச் சொந்தமான நிலங்கள், பட்டாக்கள், கிராமசபைக் கூட்டம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, வன உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள கிராம சபைகள், அதன் உறுப்பினா்கள், வனக் குழுவில் உள்ள உறுப்பினா்கள், குழுவின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், பழங்குடியினரின் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டன.

கூட்டத்தில் பழங்குடியினா் நலத்துறை இயக்குநா் அண்ணாதுரை, திட்ட அலுவலா் கலைச்செல்வி மற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கடன் பிரச்னையில் தம்பதி தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே கடன் பிரச்னையால் விஷம் குடித்து தம்பதி தற்கொலை செய்து கொண்டனா். ஆரணியை அடுத்த வடுகசாத்து மதுரா ஊராட்சி, சோ்ப்பாக்கத்தைச் சோ்ந்தவா் அ.ராஜாராமன் (58). இவரது மனைவி சா... மேலும் பார்க்க

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சாா்பில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், துறை அலுவலா்களின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

சிற்றுந்துகளை இயக்குவதற்கான அனுமதி: 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தின் 76 புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்குவதற்கான அனுமதிச் சீட்டு பெற விரும்புவோா் மாா்ச் 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத... மேலும் பார்க்க

ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சி

திருவண்ணாமலை, காந்தி நகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவ-மாணவிகளிடையே ஆங்கிலப் புலமையை வெளிப்படுத்தும் வகையிலான கலை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. பள்ளித் தாளாளா் மு.ரமணி கோட்டீஸ்வரன் தலைமை வகி... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையொப்ப இயக்கம்

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக, திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட 21 மண்டலங்களில் வியாழக்கிழமை கையொப்ப இயக்கம் நடைபெற்றது. திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட 21 மண்டலங்களில் கையொப்ப இய... மேலும் பார்க்க

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியம்மன் கோயில் தெப்பல் திருவிழா

கீழ்பென்னாத்தூா் ஆஞ்சநேயா் குளக்கரை மேட்டில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலின் 72-ஆம் ஆண்டு தெப்பல் திருவிழா நடைபெற்றது. இந்தக் கோயிலின் தோ்த் திருவிழா பிப்ரவரி 26-ஆம் தேதி தொடங்கியது. அன்று ... மேலும் பார்க்க