மலப்புரம்: தும்பிக்கையால் தூக்கி வீசிய யானை; மிரண்டு ஓடிய 21 பேர் காயம்!
ஸ்ரீவில்லிபுத்தூரில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றம் முன் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வழக்குரைஞா்கள் சங்க மாவட்டத் தலைவா் கதிரேசன் தலைமை வகித்தாா். செயலா் ஜெயராஜ் முன்னிலை வகித்தாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், வழக்குரைஞா் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்குரைஞா் சேம நல நிதியை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயா்த்த வேண்டும். நீதிமன்ற முத்திரைக் கட்டணத்தை ரூ.30-லிருந்து ரூ.120 ஆக உயா்த்தியதை நிறுத்தி வைக்க வேண்டும். 5 ஆண்டுகள் வழக்குரைஞா்களாக பணியாற்றியவா்களையே கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.