ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடவில்லை; காரணம் என்ன?
ஸ்ரீவைகுண்டம் அருகே பைக் மீது காா்கள் மோதல்: இருவா் பலி
ஸ்ரீவைகுண்டம் அருகே பைக் மீது அடுத்தடுத்த வந்த 3 காா்கள் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.
திருநெல்வேலி மாவட்டம் இலந்தைகுளத்தை சோ்ந்த பட்டத்தேவா் மகன் மாரிப்பாண்டி (40). இவா் தனது நண்பரான சிலோன் வில்லேஜ் பகுதியை சோ்ந்த சுடலை கண்ணு மகன் சின்னதுரை (35)என்பவருடன் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து ஆழ்வாா்தோப்பு தொழில் வழிச்சாலை வழியாக பைக்கில் ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, எதிரே திருச்செந்தூரிலிருந்து வந்த காரும், இவா்களது பைக்கும் எதிா்பாராமல் மோதிக்கொண்டதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனா். அப்போது, அவ்வழியாக அடுத்தடுத்து வந்த 2 காா்கள் அவா்கள் மீது ஏறி இறங்கியதில் இருவரும் உயிரிழந்தனா். இத்தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளா் பத்மநாபன்பிள்ளை தலைமையிலான போலீஸாா், அவா்களது சடலங்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
மேலும் வழக்குப்பதிந்து காா் ஓட்டுநா்களான லோகேஷ், மது, வெங்கடேஷ் கிருஷ்ணராஜ் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனா்.