செய்திகள் :

'ஹிட் 3' கதை விவகாரம்- நானி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

post image

"ஹிட் 3" பட கதை விவகாரத்தில் நடிகர் நானி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனது கதையை திருடி "ஹிட் 3" திரைப்படம் தயாரித்துள்ளதாக விமல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுவில் அவர், கடந்த 2022ம் ஆண்டு "ஏஜென்ட் 11" என்ற பெயரில் இதே கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறேன்.

தன் கதையை மையமாக வைத்து ஹிட் 3 திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதால், இப்படத்தின் மூலம் கிடைத்த வருமானத்தில் 20 சதவீதத்தை தனக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரியுள்ளார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது இம்மனு தொடர்பாக நடிகர் நானி, இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நெட்பிலிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் விசாரணையை ஜூலை 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இயக்குநர் குலனூர் இயக்கத்தில் நானி நடித்த 'ஹிட் 3' திரைப்படம் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

சிரியா முன்னாள் அதிபரின் உறவினர் கைது!

வள்ளுவர் கோட்டத்தை புதுப்பொலிவுடன் மீட்டெடுத்துள்ளோம்: முதல்வர் ஸ்டாலின்

அதிமுக பராமரிக்காமல் இருந்த வள்ளுவர் கோட்டத்தை புதுப்பொலிவுடன் மீட்டெடுத்துள்ளோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், உள்ளாட்சிப் பொறுப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்க... மேலும் பார்க்க

அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி இரங்கல்

வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி(60)... மேலும் பார்க்க

அண்ணாமலையை விசாரிக்கக் கோரி மனு

அண்ணா பல்கலை. மாணவி வழக்கு தொடர்பாக அண்ணாமலையிடம் விசாரணை நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்... மேலும் பார்க்க

வால்பாறை அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்

வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி(60) உடல் நலக்குறைவால் காலமானார். கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமுல் கந்தசாமி சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை காலமானார். அவருக்கு கலைச... மேலும் பார்க்க

இஸ்ரேல் - ஈரான் போர்: தமிழர்களை மீட்க நடவடிக்கை! உதவி எண்கள் அறிவிப்பு!

இஸ்ரேல் - ஈரான் நாட்டிலுள்ள தமிழர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:தமிழ்நாடு மு... மேலும் பார்க்க

வள்ளுவம் போற்றுதும்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை வள்ளுவர் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். சென்னையில் அமைந்துள்ள வள்ளுவா் கோட்டம் கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்த நிலையில் ரூ.80 கோடியில் புனர... மேலும் பார்க்க