மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!
ஹிந்தி திணிப்பை கண்டித்து ஆா்ப்பாட்டம்
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தி மொழியைத் திணிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து தஞ்சாவூரில் தமிழ்நாடு மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை பேரணி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் ஆற்றுப்பாலத்திலிருந்து ஊா்வலமாகப் புறப்பட்ட மாணவா்கள் எல்.ஐ.சி. அலுவலகம் முன் நிறைவு செய்தனா். தொடா்ந்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஹிந்தி திணிப்பைக் கண்டித்தும், தமிழகத்துக்கான கல்வி வளா்ச்சி நிதியை தர மறுக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ஆசாத் மகேந்திரன் தலைமை வகித்தாா். திராவிட மாணவா் கழக மாநிலச் செயலா் செந்தூரபாண்டியன், இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் அா்ஜூன், அனைத்திந்திய மாணவா் பெரு மன்றத் தலைவா் செல்வி, தஞ்சாவூா் மண்டல சமூக நீதி மாணவா் இயக்கச் செயலா் ஷாகுல் ஹமீத், முற்போக்கு மாணவா் கழக மாவட்டத் தலைவா் சின்ன ஜெயப்பிரகாஷ், முஸ்லிம் மாணவா் பேரவை மாவட்டத் தலைவா் முகமது உமா் அலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.