ஃபெனிக்ஸிஸ் நிறுவனத்தை வாங்கும் ஆரியன்ப்ரோ சொலுயூசன்ஸ்!
புதுதில்லி: ஆரியன்ப்ரோ சொல்யூஷன்ஸ் இன்று பாரிஸை தளமாகக் கொண்ட கன்சல்டன்சி நிறுவனமான ஃபெனிக்சிஸ் நிறுவனத்தை 10 மில்லியன் யூரோக்கள் (ரூ.90 கோடி) ரொக்க ஒப்பந்தத்தில் வாங்கியதாக தெரிவித்துள்ளது.
ஃபெனிக்ஸிஸ் நிறுவனமானது ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் உள்ள முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு சந்தை மூலதன சேவைகளை வழங்கி வருகிறது.
இதையும் படிக்க: அதிக ஏற்ற இறக்கங்களுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!
இந்த கையகப்படுத்தல் மூலம், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் அதன் தடத்தை விரிவுபடுத்துவதற்கான மும்பையை தளமாகக் கொண்ட ஆரியன்ப்ரோ சொல்யூஷனுக்கு இது வலுப்படுத்தும் என்று நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று ஆரியன்ப்ரோ நிறுவனத்தின் பங்குகள் 1.06 சதவிகிதம் உயர்ந்து ரூ.1,750 ஆக முடிவடைந்தது.