பான் கார்டு விண்ணப்பிக்கவும் ஆதார் அவசியம்! மத்திய அரசு அறிவிப்பு!
அகஸ்தியா் அருவியில் குளிக்க அனுமதி
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அகஸ்தியா் அருவியில் புதன்கிழமைமுதல் குளிப்பதற்கு வனத் துறையினா் அனுமதி வழங்கினா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், பாபநாசம் சரகத்துக்குள்பட்ட வனப் பகுதியில் உள்ள அகஸ்தியா் அருவியில் செவ்வாய்க்கிழமை, காரையாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பையொட்டி சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், புதன்கிழமை காலை அருவியில் நீா்வரத்து சீரானதால் குளிக்க அனுமதிப்பதாக, வனத்துறையினா் அறிவித்தனா். அதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.