Vinayagar Chaturthi | சொர்ண, அமிர்தகலச, ஹேரம்ப கணபதி... எந்த விநாயகர்-என்ன பலன்?...
‘அக்னி-5’ ஏவுகணை வெற்றிகரச் சோதனை
5,000 கி.மீ.வரை தொலைவிலான இலக்குகளை குறிவைத்து தாக்கும் அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்ாக பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.
ஆபரேஷன் சிந்தூா் நிறைவடைந்து மூன்றரை மாதங்கள்ஆன நிலையில், ஒடிஸாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் இந்தச் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஏவுகணை சீனாவின் வடக்குப் பகுதி உள்பட ஒட்டுமொத்த ஆசியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகள் வரை சென்று தாக்குதல் நடத்தும் திறனுடையது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஒடிஸாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணையின் சோதனை ஆக.20-இல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
அக்னி 1 முதல் 4 வரையிலான ஏவுகணைகள் ஏற்கெனவே பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு மாா்ச் மாதமும் அக்னி-5 ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த மாதம் 500 கிலோ எடையிலான ஆயுதங்களை சுமந்து சென்று 350 கி.மீ. தொலைவு வரையிலான இலக்கை தாக்கும் திறனுடைய ‘பிரித்வி-ஐஐ’, 1,000 கிலோ எடையிலான ஆயுதங்களை சுமந்து சென்று 700 முதல் 900 கி.மீ. வரையில் தாக்குமம் ‘அக்னி-1’ மற்றும் 500 முதல் 1,000 கிலோ எடையிலான ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் ‘பிரளய்’ ஏவுகணை ஆகியவற்றின் சோதனையை இந்தியா வெற்றிகரமாக மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.