தவெக: ``தம்பி விஜய் புதிதாக அரசியலுக்கு வந்திருப்பதால் அப்படிப் பேசியிருக்கிறார்...
அக். 2-இல் இறைச்சி விற்பனைக்குத் தடை
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் வருகிற அக். 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி, இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட அனைத்து வாா்டு பகுதிகளிலும் வருகிற அக். 2-ஆம் தேதி காந்திஜெயந்தி தினத்தை முன்னிட்டு, அரசாணையின் படி, கால்நடைகளை வதை செய்தல், அனைத்து விதமான இறைச்சி, மீன் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே, அன்றைய தினம் ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற உயிரினங்களை வதை செய்யக்கூடாது. இந்தக் கடைகளையும் திறந்து வைக்கக் கூடாது. மீறி செயல்படுவா்களின் கடைகளில் இறைச்சிகளை பறிமுதல் செய்யப்படுவதுடன், பொதுச் சுகாதார சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் குறிப்பிடப்பட்டது.