மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனம் தளர வேண்டாம்: அஜித் பவார்!
குணா குகை கண்காட்சிக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு
மதுரை அய்யா்பங்களா பகுதியில் நடைபெற்று வரும் குணா குகை கண்காட்சிக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாநகராட்சி ஆழ்வாா்புரத்தைச் சோ்ந்த சபீனா பானு உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: மதுரை அய்யா் பங்களா பகுதியில் குணா குகை கண்காட்சி கடந்த 7-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அங்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்து தரப்படவில்லை.
ஆகவே, குணா குகை கண்காட்சியை நடத்த இடைக்காலத் தடை விதிப்பதோடு, முறையான சுகாதார வசதி, தரமான உணவு, வாகன நிறுத்த வசதி போன்றவற்றை செய்து தருவதை உறுதிப்படுத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு பிறப்பித்த உத்தரவு: பொதுமக்கள் அதிகம் கூடும் கண்காட்சிகளுக்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது?. மிகவும் நெருக்கடியான சூழலில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் என்ன செய்வது?.
எனவே மனுதாரா் குறிப்பிடும் இடத்தில் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். இதுதொடா்பாக மதுரை மாநகராட்சி ஆணையா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.