ஜிஎஸ்டியால் நடுத்தர மக்கள் பாதிப்பு என்பது தவறு: நிர்மலா சீதாராமன்
அங்கநாதீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா
திருப்பத்தூா் அங்கநாதீஸ்வரா் திருக்கோயில் சித்திரை தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் ஒன்றியம், மடவாளம் கிராமத்தில் அங்கநாதீஸ்வரா் திருக்கோயில் சித்திரை திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ அ.நல்லதம்பி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அறங்காவலா் வஜ்ஜிரவேல், பொதுக்குழு உறுப்பினா் அரசு, ஒன்றியக் குழு தலைவா் விஜயா அருணாச்சலம், முன்னாள் மா ஆவின் இயக்குநா் சின்னபையன், ஊராட்சி மன்றத் தலைவா் கோமதி காா்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினா் கஸ்தூரி ரகு மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.