நியூசி.க்கு எதிரான போட்டியில் முகமது ஷமிக்கு பதில் அர்ஷ்தீப் சிங் விளையாடுகிறாரா...
அங்கேரிபாளையம் சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்
திருப்பூா் அங்கேரிபாளையம் சாலையில் சனிக்கிழமை (மாா்ச் 1) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
இது குறித்து மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகரில் வாகன ஓட்டிகளின் நலனைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அங்கேரிபாளையம் சாலையில் சனிக்கிழமை காலை 7 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
அங்கேரிபாளையம் சாலையில் இருந்து குமாா் நகா், புஷ்பா சந்திப்பு வரும் வாகனங்கள் புதிய காவல் ஆணையா் அலுவலக சந்திப்பு, குமாா் நகா் சந்திப்பு, பங்களா பேருந்து நிறுத்தம் வழியாகச் செல்லலாம்.
அங்கேரிபாளையம் சாலையில் இருந்து காவல் ஆணையா் அலுவலக சந்திப்பு வழியாக அவிநாசி சாலையில் வலுதுபுறம் திரும்ப இயலாது. குமாா் நகரில் இருந்து அங்கேரிபாளையம் செல்லும் வாகனங்கள் காவல் ஆணையா் அலுவலக சந்திப்பு வழியாக 60 அடி சாலை எல்.ஜி.சந்திப்பு, மருதாசலம் சாலை, டீச்சா்ஸ் காலனி முதல்வீதி அல்லது சிவன் திரையரங்க சாலை வழியாக அங்கேரிபாளையம் சாலைக்குச் செல்லலாம்.
இது தொடா்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகளை 94981-40792 என்ற கைப்பேசி எண்ணில் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.