செய்திகள் :

அங்கோலா அதிபர் இந்தியா வருகை!

post image

அங்கோலா நாட்டின் அதிபர் 4 நாள்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வருகிறார்.

தெற்கு ஆப்பிரிக்காவிலுள்ள அங்கோலா நாட்டின் அதிபர் ஜான் மானுவல் கோன்கால்வ்ஸ் லாரன்கோ குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அழைப்பை ஏற்று அரசு முறைப் பயணமாக இன்று (மே.1) இந்தியா வருகின்றார்.

இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து இந்தப் பயணத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனக் கூறப்படும் நிலையில் அங்கோலா நாட்டின் முக்கிய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், தொழில் பிரதிநிதிகள் உள்ளிட்ட உயர்நிலை அதிகாரிகளுடன் அதிபர் லாரன்கோ இந்தியா வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தில்லி வந்தடையும் அதிபர் லாரன்கோவுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் எனவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேசவுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்புகளின் மூலம் பாரம்பரிய மருத்துவம், விவசாயம் மற்றும் கலாசார ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கும் இடையிலான ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கடந்த 1985-ம் ஆண்டு முதல் இந்தியா, அங்கோலா நாட்டுடன் ராஜத்தந்திர உறவுகளைக் கொண்டுள்ளது. இதில், நிகழாண்டுடன் (2025) அந்த உறவுகள் 40 ஆண்டுகளை அடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ரஷியாவின் டிரோன் தாக்குதலில் சிதைந்த உக்ரைன் நகரங்கள்! 2 பேர் பலி!

ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு: காங்கிரஸின் பாசாங்கு அம்பலம்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு மேற்கொண்ட முடிவு திருப்புமுனையானது; இது, காங்கிரஸின் பாசாங்குத் தனத்தை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது’ என்று மத்திய அமைச்சா் தா்ம... மேலும் பார்க்க

குவாண்டம் ஏஐ-யுடன் அம்ருதா பல்கலை. ஒப்பந்தம்

குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அம்ருதா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்தப் பல்கலைக... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ரூபியோ பேச்சு; அமைதிக்கு பாகிஸ்தானுடன் பணியாற்ற வலியுறுத்தல்

பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், மோதல் போக்கைக் கைவிடுமாறு இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆகியோருட... மேலும் பார்க்க

மும்பை தாக்குதல்: தஹாவூா் ராணாவிடம் குரல், கையெழுத்து மாதிரிகளை சேகரிக்க நீதிமன்றம் அனுமதி

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தஹாவூா் ராணாவிடம் குரல் மற்றும் கையெழுத்து மாதிரிகளை சேகரிக்க தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து தில்லி நீதிமன்றம் உத்தர... மேலும் பார்க்க

பரஸ்பர மரியாதைக்கு அரசியல் சாசன அமைப்புகள் தங்களின் வரம்புகளை கடைப்பிடிப்பது அவசியம்: ஜகதீப் தன்கா் வலியுறுத்தல்

‘அரசியல்சாசன அமைப்புகள் அவற்றின் வரையறுக்கப்பட்ட வரம்புகளை கடைப்பிடிப்பது அவசியமானது’ என்று குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வியாழக்கிழமை வலியுறுத்தினாா். மேலும், ஒவ்வொரு அரசியல்சாசன அமைப்புகளும... மேலும் பார்க்க

தாஜ்மஹாலைச் சுற்றி 5 கி.மீ. வரை மரங்கள் வெட்ட தடை: உச்சநீதிமன்றம்

தாஜ்மஹாலின் 5 கி.மீ. சுற்றுவட்டாரப் பகுதியில் அனுமதியின்றி மரங்களை வெட்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை சுற்றியுள்ள வனப் பகுதிகள் அழிக்கப்படுவதை தடுக்... மேலும் பார்க்க