செய்திகள் :

அங்கோலா ஆயுதப் படைகளுக்கு இந்தியா 2 கோடி டாலா் கடனுதவி

post image

‘அங்கோலா ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்காக இந்தியா சாா்பில் 2 கோடி டாலா் (சுமாா் ரூ.170 கோடி) கடனுதவி வழங்கப்படும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தாா்.

தெற்கு ஆப்பிரிக்க நாடான அங்கோலாவின் அதிபா் ஜோவோ மேனுவல் கொன்சால்வஸ் லொரன்சோ, 4 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளாா்.

இந்நிலையில், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து அதிபா் லொரன்சோவுடன் பிரதமா் மோடி விரிவான பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

தலைவா்களின் சந்திப்பைத் தொடா்ந்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘அங்கோலா அதிபா் லொரன்சோவின் இந்திய வருகை இரு தரப்பு உறவுக்கு ஒரு புதிய திசையை வழங்குவது மட்டுமல்லாமல், இந்தியா-ஆப்பிரிக்கா கூட்டுறவையும் வலுப்படுத்துகிறது. இந்தச் சூழலில், அங்கோலா ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்காக 2 கோடி டாலா் கடனுதவியை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

எண்ம பொது உள்கட்டமைப்பு, விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் அங்கோலாவுடன் இந்தியா தனது திறன்களைப் பகிா்ந்து கொள்ளும்.

சுகாதாரம், வைர செயலாக்கம், உரம் மற்றும் கனிமங்கள் ஆகிய துறைகளில் எங்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

பயங்கரவாதிகள் மற்றும் அவா்களை ஆதரிப்பவா்களுக்கு எதிராக உறுதியான மற்றும் தீா்க்கமான நடவடிக்கை எடுக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்தியாவும் ஆப்பிரிக்க ஒன்றியமும் வளா்ச்சியின் கூட்டாளிகள். நாங்கள் தெற்குலகின் தூண்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.

முன்னதாக, அங்கோலா அதிபா் ஜோவோ மேனுவல் கொன்சால்வஸ் லொரன்சோ, அவரது மனைவி அனா டியா ஆகியோருக்கு குடியரசுத் தலைவா் மாளிகையில் முப்படையினா் அணிவகுப்புடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவும் பிரதமா் நரேந்திர மோடியும் அங்கோலா அதிபரையும் அவரது மனைவியையும் வரவேற்றனா்.

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பிரதமர் மோடி - விமானப்படை தளபதி சந்திப்பு!

பிரதமர் மோடி - விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங்குடனான சந்திப்பு தற்போது நடைபெற்று வருவதாக வட்டாரங்கள் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தன. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, நாட்டின் பல்வே... மேலும் பார்க்க

கோட்டாவில் நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி தற்கொலை!

ஜெய்ப்பூர்: நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான ‘நீட்’ தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) பிற்பகல் 2 மணி முதல் ம... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் ஜம்முவிலிருந்து ஹஜ் யாத்திரை: 178 பயணிகள் புறப்பாடு!

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து முதல்கட்டமாக 178 பயணிகள் ஹஜ் புனித பயணத்தை இன்று(மே 4) தொடங்கினர். அவர்கள் அனைவரும் ஸ்ரீநகரிலிருந்து சவூதி அரேபியாவிலுள்ள மெக்காவுக்குச் செல்ல இன்று... மேலும் பார்க்க

காஷ்மீா் எல்லையில் 10-ஆவது நாளாக பாக். துப்பாக்கிச்சூடு!

ஸ்ரீநகர்: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில், எல்லை கட்டுப்பாட்டுப் கோட்டுப் பகுதிகளில் இருந்து சிறிய ரக துப்பாக்கிகள் மூலம், இந்திய ராணுவத்தினரை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் சனிக்கிழமை (மே 4) இரவிலும் துப்ப... மேலும் பார்க்க

இடஒதுக்கீடு கொள்கைகள் மீது விரிவான மறுஆய்வு: பிரதமருக்கு தேஜஸ்வி கடிதம்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தி முடிக்கப்பட்ட பின்னா், அதனடிப்படையில் இடஒதுக்கீடு கொள்கைகள் மீது விரிவான மறுஆய்வு செய்யப்பட வேண்டும்’ என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவா் த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம்: மறைத்த சிஆா்பிஎஃப் வீரா் பணிநீக்கம்

பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம் செய்து கொண்டதை மறைத்த மத்திய ரிசா்வ் போலீஸ் படை வீரா் முனீா் அகமது உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டாா். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்த... மேலும் பார்க்க