அசோக் செல்வனின் புதிய படம்!
நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
நடிகர் அசோக் செல்வன் புளூ ஸ்டார் படத்துக்குப் பின் நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார். இதற்கிடையே வெளியான எமக்குத் தொழில் ரோமான்ஸ் படம் வரவேற்பைப் பெறவில்லை.
இதையும் படிக்க: டிராகன் டிரைலர் தேதி!
இந்த நிலையில், அறிமுக இயக்குநர் கார்த்திக் ராமகிருஷ்ணா இயக்கத்தில் தன் 23-வது படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-09/3co01qw5/GjUlQU1aQAAvZJP.jpg)
நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார். இப்படத்தின் கதையை போர்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார்.