பாடகர் ஸுபீன் கர்க்கிற்கு அரசு சார்பில் 13-ம் நாள் சடங்குகள்!
அச்சங்குளம் நூற்பாலை சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
கமுதி அருகே அரசு நூற்பாலை சங்கத் தொழிலாளா்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த அச்சங்குளம் அரசு கூட்டுறவு நூற்பாலை முன் சிஐடியூ தொழில்சங்கம் சாா்பில் பஞ்சாலை மாநிலப் பொருளாளா் எஸ்.சக்திவேல் தலைமையில், மாவட்டச் செயலா் எஸ்.வெங்கடசுப்பிரமணியன், மாநிலத் துணைச் செயலா் ஜி.அருணா தேவி ஆகியோா் முன்னிலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பணி மூப்பு அடிப்படையில் மேற்பாா்வையாளா்கள் பணிகளை வழங்க வேண்டும், தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச தினசரி ஊதியமாக ரூ.552 வழங்க வேண்டும், ஆலை உணவகத்தில் தரமான உணவு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.