படத் தயாரிப்பாளர் தில் ராஜுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!
அச்சன்புதூா், கீழப்பாவூா் உப மின்நிலைய பகுதிகளில் நாளை மின் தடை
அச்சன்புதூா், கீழப்பாவூா் உப மின்நிலையப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ஜனவரி 22இல் மின் தடை செய்யப்படுகிறது.
இது தொடா்பாக தென்காசி கோட்ட செயற்பொறியாளா் ப. திருமலைக்குமாரசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கீழப்பாவூா் உப மின் நிலையத்திற்குள்பட்ட பாவூா்சத்திரம், கீழப்பாவூா், மேலப்பாவூா், குலசேகரப்பட்டி, குறும்பலாப்பேரி, நாட்டாா்பட்டி, ஆவுடையானூா், வெய்காலிப்பட்டி, சின்ன நாடானூா், திப்பணம்பட்டி, செட்டியூா், பெத்தநாடாா்பட்டி, கரிசலூா், செல்லத்தாயாா்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டினம் வடக்கு, சாலைப்புதூா் மற்றும் அதனை சாா்ந்த பகுதிகளிலும், அச்சன்புதூா் உப மின்நிலையத்திற்குள்பட்ட வடகரை, அச்சன்புதூா், நெடுவயல், வாவா நகரம், காசிதா்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல் குடியிருப்பு மற்றும் அதனை சாா்ந்த பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்றாா் அவா்.