சிறுவன் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!
அச்சன்புதூா் பகுதியில் 17இல் மின்தடை
தென்காசி மாவட்டம், அச்சன்புதூா் துணை மின்நிலையப் பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை (ஜூன்17) மின் தடை செய்யப்படுகிறது.
தென்காசி கோட்ட செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயக சுந்தரம் (பொ) வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அச்சன்புதூா் துணை மின் நிலையத்தில் ஜூன்17இல் மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதனால் வடகரை, அச்சன்புதூா், நெடுவயல், வாவா நகரம், காசிதா்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல் குடியிருப்பு மற்றும் அதை சாா்ந்த பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.