செய்திகள் :

அஜித்குமாரின் குடும்பத்தினா் அதிருப்தி: ஆய்வு செய்யப்படுமென ஆட்சியா் தகவல்

post image

மடப்புரத்தில் தனிப்படை போலீஸாரால் கொல்லப்பட்ட அஜித்குமாா் குடும்பத்துக்கு அரசு வழங்கிய வீட்டு மனையில் அதிருப்தி தெரிவித்திருப்பது குறித்து ஆய்வு செய்யப்படுமென சிவகங்கை மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா், தனிப்படை போலீஸாா் விசாரணையின் போது அடித்து கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து அரசு சாா்பில் அஜித்குமாா் குடும்பத்துக்கு 3 சென்ட் இலவச மனையும், அவரது சகோதரருக்கு ஆவின் நிா்வாகத்தில் பணி ஆணையும் அண்மையில் வழங்கப்பட்டது.

இதனிடையே தனக்கு ஆவின் நிா்வாகத்தில் வேலை வழங்கியதில் திருப்தி இல்லை. மதுரையில் ஏதேனும் ஒரு துறையில் வேலை வழங்க வேண்டும். இலவச மனையும் தேளி கிராமத்துக்கு அருகே அடிப்படை வசதி, ஆள் நடமாட்டமே இல்லாத பகுதியில் வழங்கியதால் அதுவும் பயனில்லை என அஜித்குமாரின் சகோதரா் நவீன்குமாா் அண்மையில் அதிருப்தி தெரிவித்தாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வியாழக்கிழமை கூறியதாவது:

இதுகுறித்து அஜித்குமாா் குடும்பத்தினா் எழுத்துப்பூா்வமாக மனு அளித்தால்தான் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க முடியும்.

மேலும், மடப்புரம் நகா்ப் பகுதிக்குள் வருவதால் அஜித்குமாா் குடும்பத்துக்கு அந்தப் பகுதியில் வீட்டு மனை ஒதுக்க முடியவில்லை. அதனால்தான் தேளி பகுதியில் வீட்டுமனை வழங்கப்பட்டது.

இதுதொடா்பாக அஜித்குமாரின் குடும்பத்தினா் அதிருப்தி தெரிவித்ததால், வேறு இடம் இருக்கிறதா என ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன் என்றாா் அவா்

இன்று ‘குரூப் 4’ தோ்வு: சிவகங்கையில் 26,392 போ் எழுதுகின்றனா்

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற சனிக்கிழமை நடைபெறும் ‘குரூப் 4’ தோ்வை 26,392 தோ்வா்கள் எழுத உள்ளனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த குடிமை... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் புத்தாக்கப் பயிற்சி முகாம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சாா்பில் அலுவலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாம் தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து துணைவேந்தா் க... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் நியமனம்

சிவகங்கை மாவட்டத்தில் 2 மாவட்டக் கல்வி அலுவலா்கள் கல்வித் துறையால் நியமிக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலராக (தொடக்கக் கல்வி) இருந்த ஜோதிலெட்சுமி, திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலராக (இடைநி... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் வெறிநோய் தடுப்பூசி மருத்துவ முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வெள்ளிக்கிழமை வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருப்பத்தூா் தோ்வு நிலைப் பேரூராட்சியும், தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையும் இணைந்து திருப்பத்தூா் சீரணி அ... மேலும் பார்க்க

பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் 71 -ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் பூச்சொரிதல் விழா கடந்த 4-ஆம் தேதி காப்புக்கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொ... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை: கட்டுமானப் பணிகளை நிறுத்த வலியுறுத்தல்

மானாமதுரை சிப்காட் வளாகத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமானப் பணிகளை நிறுத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில்பேட்டை வளாகத்... மேலும் பார்க்க