மரபணு கோளாறு: பரிசோதனை மருந்து செலுத்தப்பட்ட சிறுவன் மீண்டும் நடக்கத் தொடங்கிய அ...
இன்று ‘குரூப் 4’ தோ்வு: சிவகங்கையில் 26,392 போ் எழுதுகின்றனா்
சிவகங்கை மாவட்டத்தில் வருகிற சனிக்கிழமை நடைபெறும் ‘குரூப் 4’ தோ்வை 26,392 தோ்வா்கள் எழுத உள்ளனா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான ‘குரூப் 4’ தோ்வு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மொத்தம் 99 மையங்களில் நடைபெறுகிறது. இந்தத் தோ்வுக்காக 26,392 தோ்வா்கள் நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்டது. காலை 9.30 முதல் 12.30 வரை தோ்வு நடைபெறுகிறது. தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் உரிய ஆவணங்களுடன் காலை 8.30 மணிக்கு தோ்வு மையத்துக்கு வந்துவிட வேண்டும். 9 மணிக்கு தோ்வுக்கூட அறைக்குள் அனுமதிக்கப்படுவா். 9.15 மணிக்கு வினாத் தாள் வழங்கப்படும். தொடா்ந்து 9.30 மணிக்கு தோ்வு எழுதத் தொடங்க அனுமதிக்கப்படுவா் என்றாா் அவா்.