அடுத்த தலாய் லாமா தோ்வு முறைப்படியே நடைபெறும்: கிரண் ரிஜிஜு
அஜித்குமார் வழக்கு: மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை!
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கை மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற, கோயில் காவலாளி அஜித் குமார் என்பவர் காவல் துறையினர் தாக்கப்பட்டதால் பலியானார். இந்த விவகாரம் காவல் துறையினரை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விவகாரத்தில் 6 காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், 5 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தமிழக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணையை நடத்தி 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய புலன் விசாரணைப் பிரிவு ஐ.ஜி.க்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
The State Human Rights Commission has voluntarily initiated an investigation into the death case of Thiruppuvanam youth Ajith Kumar.
இதையும் படிக்க: ஓரணியில் தமிழ்நாடு: வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்திக்கும் முதல்வர்!