செய்திகள் :

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

post image

பதிவு அஞ்சல் முறை, விரைவு அஞ்சலுடன் இணைக்கப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை செப்.1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

இந்திய அஞ்சல் சேவையின் செயல்பாட்டுக் கட்டணம் மற்றும் விரைவாக அஞ்சலை சேர்க்கும் வகையிலும் விரைவாக அஞ்சலை சேர்க்கும் வகையிலும் இந்த புதிய மாற்றம் மேற்கொள்ளப்படுவதாகவும், இரண்டு பிரிவுகளை ஒன்றிணைக்கும் போது ஒரே பிரிவில் அஞ்சல் விநியோகிக்கப்படும் நிலவரத்தை மக்களால் எளிதாகக் கண்காணிக்கவும் இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒருங்கிணைப்பின்போது, ஒரு அஞ்சலின் பாதுகாப்புக் கருதி பதிவு அஞ்சலை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள், விரைவு அஞ்சலையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அஞ்சல் வழங்கப்பட்டதற்கான ரசீதும், உரியவரிடம் சேர்க்கப்பட்டதற்கான சான்றும், விரைவு அஞ்சலில் கூடுதலாக சேர்க்கப்படும்.

விரைவு அஞ்சலையும், பதிவு அஞ்சலையும் ஒன்றிணைக்கும் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் அஞ்சல்களை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய மையங்களை அஞ்சல் துறை ஏற்கனவே தொடங்கிவிட்டது.

நுகர்வோர் பிரதிநிதிகள் புதிய மாற்றத்தையும் நவீனமயமாக்கலையும் வரவேற்றாலும், ஒட்டுமொத்த செயல்பாட்டுச் செலவினங்களையும் பயனாளர்களிடமே வசூலிக்காமல் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள்.

ஆகஸ்ட் மாதம் இறுதிவரை இவ்விரு சேவைகளும் வழக்கம் போல செயல்படும். செப்டம்பர் முதல், பாதுகாப்பாகச் சென்று சேர வேண்டிய அஞ்சல்களை விரைவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். தற்போது, விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்படும் அஞ்சல்கள் அடுத்த நாளே விநியோகிக்கப்படும். தொலைதூர அஞ்சல்கள் அதிகபட்சம் 5 நாள்களுக்குள் சென்று சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடியின் கைப்பாவையாக மாறிவிட்டதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். பிகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான... மேலும் பார்க்க

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஸ்ரீநகர் : அமர்நாத் யாத்திரை திட்டமிடப்பட்ட ஒருவாரத்துக்கு முன்பே நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை செல்ல ரக்‌ஷா பந்தன் நாளான ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்ப... மேலும் பார்க்க

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

பாலியல் வழக்கில் முன்னாள் பிரதமர் தேவே கௌடாவின் பேரனும் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று(ஆக. 2) தீர்ப்பு வழங்கியுள்ளது.வீட்டுப் பணிப்... மேலும் பார்க்க

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் சாலையோரத்தில் மூவரின் சடலம் கண்டெக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கூடுதல் எஸ்பி சதீஷ் யாதவ் கூறுகையில், பரத்பூ... மேலும் பார்க்க

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

சத்தீஸ்கரில் மதமாற்றம் செய்ய முற்பற்றதாக கன்னியாஸ்திரிகளை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் சிறுமிகள் மூவரை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று அவர்களை மதமாற்றம் செய்ய முற்பற்றதாக எழு... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

பிகார் வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று பிகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்திற்க... மேலும் பார்க்க