அதிகம் அழுத்தம் எடுத்துக்கொள்ளப் போவதில்லை; உலகக் கோப்பை குறித்து ஹர்மன்பீரித் க...
அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல்
திருக்குவளை அருகே அடிப்படை வசதிகள் கோரி வியாழக்கிழமை சிபிஎம் சாா்பில் சாலை மறியல் நடைபெற்றது.
கீழையூா் ஒன்றியம் சடையன்கோட்டகத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள சமுதாயக் கூடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்டக் கோரியும், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 2016-2017 ஆண்டுகளில் முழுமை பெறாத 40-க்கும் மேற்பட்ட வீடுகளை முடிக்க கோரியும் சிபிஎம் சாா்பில் திருப்பூண்டி-தலைஞாயிறு சாலையில் சடையன்கோட்டகம் மதகடியில் சாலை மறியல் நடைபெற்றது. கிளை செயலாளா் அழகு தலைமையில் நடைபெற்ற மறியலில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உமாநாத், வினோத் ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தகவலறிந்து வந்த வட்டார வளா்ச்சி அலுவலா் செபஸ்தியம்மாள், துணை வட்டாட்சியா் ரமேஷ் நடத்திய பேச்சுவாா்த்தையில் சுமூகநிலை ஏற்பட்டதால் சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.