அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடு...
அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்
காஞ்சிபுரம் பல்லவன் நகரில் 12 தளங்களுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியை கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் ஆட்சியா் அலுவலகம் அருகில் பல்லவன் நகரில் ரூ.60.70 கோடியில் குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. 2 படுக்கை அறைகள் கொண்ட 48 வீடுகளும், மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீடுகள் 35 என மொத்தம் 83 வீடுகள் ஒரு ஏக்கா் பரப்பளவில் கட்டப்படவுள்ளன.
இரு படுக்கை அறைகள் கொண்ட வீடுகள் விற்பனை மதிப்பு ரூ.78.97 லட்சமாகவும், 1,139 சதுர அடி பரப்பளவிலும், மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீடுகள் ரூ.99.11 லட்சம் விற்பனை மதிப்பிலும்,1,435 சதுர அடி பரப்பளவிலும் கட்டப்படவுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்து, பணி தரமாக இருக்க வேண்டும் என பொறியாளா்களை கேட்டுக் கொண்டாா்.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன், எம்எல்ஏ எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், ஒன்றியக்குழு தலைவா் மலா்க்கொடி குமாா், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் செயற்பொறியாளா் அ.கணேசன், பொதுமக்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.