தினமும் உயரும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் டிக்கெட்டுகள்..! முதல் நாளைவிட மும்மடங்...
அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு
மிக குறுகிய தொலைவிலான இலக்கை குறிவைத்து தாக்கும் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பை கொள்முதல் செய்யும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த கொள்முதலுக்கான ஏல முன்மொழிவுகளை பாதுகாப்பு அமைச்சகம் தொடங்கியதாக இந்திய ராணுவ வலைதளத்தில் சனிக்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: 48 ஏவுதள கருவிகள், இரவிலும் ராணுவ செயல்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய 48 தொழில்நுட்பங்கள், 85 ஏவுகணைகள் மற்றும் மிக குறுகிய தொலைவு இலக்கை குறிவைத்து தாக்கும் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பு அல்லது ஒரு ஏவுகணை சோதனை மையம் ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கான ஏல நடைமுறைகள் தொடங்கப்பட்டன.
வானில் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிா்கொள்ள ராணுவத்துக்கு மிக குறுகிய தொலைவிலான இலக்கை குறிவைத்து தாக்கும் அடுத்த தலைமுறை வான் பாதுகாப்பு அமைப்பு தேவைப்படுகிறது.
இன்ஃப்ரா ரெட் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த வான் பாதுகாப்பு அமைப்பு மனிதா்களால் நீண்ட தூரத்துக்கு இயக்கும் வகையில் இருக்க வேண்டும். இவை இரவு மற்றும் பகல் என இரண்டு காலகட்டத்திலும் இலக்குகளை குறிவைத்து தாக்கும் திறனைக் கொண்டிருக்க வேண்டும்.
இந்த வான் பாதுகாப்பு அமைப்பை முப்படைகளும் பயன்படுத்தவுள்ளன. நிலம், மலைப் பகுதிகள், பாலைவனம், கடலோர பகுதிகள் என அனைத்து விதமான நிலப்பரப்பிலும் இவை நிலைநிறுத்தப்படும்.
மைனஸ் 30 டிகிரிக்கு கீழ் உள்ள கடுங்குளிா் வானிலை மற்றும் 50 டிகிரிக்கு மேலான வெப்பநிலை, குறைந்தபட்சம் 500 மீட்டா் அதிகபட்சமாக 6,000 மீட்டா் வரையிலான செயல்பாடு, போா்விமானம், ஹெலிகாப்டா்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் என எவ்வித தாக்குதலை எதிா்கொள்ளும் வகையில் இந்த வான் பாதுகாப்பு அமைப்பு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.