செய்திகள் :

அடுத்த 2 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

post image

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் சனிக்கிழமை(செப்.13) ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர்ந்து செப். 16 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சனிக்கிவமை காலை பத்து மணி வரை தமிழகத்தில் 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய ஏழு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

The Meteorological Department has said that light to moderate rain is likely in 7 districts of Tamil Nadu in the next 2 hours.

மோடியின் மணிப்பூர் பயணம் "கேலிக்கூத்தானது": ஜெய்ராம் ரமேஷ் தாக்கு

புது தில்லி : பிரதமர் நரேந்திர மோடியின் மணிப்பூர் பயணம் என்பது "கேலிக்கூத்தானது" என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை விமர்சினம் செய்துள்ளார். இது "அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான ச... மேலும் பார்க்க

கொள்கையில்லாமல் கூக்குரலிட்டு, கும்மாளம் போடும் கூட்டமல்ல திமுக! மு.க. ஸ்டாலின் கடிதம் - முழுமையாக...

முப்பெரும் விழாவாக -உடன்பிறப்புகளின் திருவிழாவாகக் கொண்டாடும் வழக்கத்தைத் தொடங்கியவர் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார... மேலும் பார்க்க

விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி விபத்து: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டத... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மணிப்பூரில் பலத்த பாதுகாப்பு!

இம்பால்: மணிப்பூருக்கு சனிக்கிழமை (செப்.13) பிரதமா் நரேந்திர மோடியின் முன்னிட்டு மணிப்பூரின் இம்பாலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமரை வரவேற்பதற்காக நகரம் முழுவதும் அலங்கரிக்கப்ப... மேலும் பார்க்க

விநாயகா் சிலை ஊா்வலத்தில் 9 போ் பலி: பிரதமர் ரூ.2 லட்சம் நிவாரணம்

புது தில்லி: கா்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை ஊா்வலத்தில் வேன் மோதி ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை இரங்கல் தெரிவித்திருப்பத... மேலும் பார்க்க

திண்டுக்கல் அருகே பஞ்சு ஆலையில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார்நத்தம் பகுதியில் தனியார் பஞ்சு ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமானதாக அதிகாரி... மேலும் பார்க்க