செய்திகள் :

அடுத்த 3 நாள்களுக்கு வெய்யில் அதிகரிக்கும்!

post image

தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெய்யில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,

21-02-2025 மற்றும் 22-02-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

23-02-2025 முதல் 26-02-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

27-02-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெய்யில் அதிகரிக்கும்

21-02-2025 முதல் 24-02-2025 வரை அடுத்த நான்கு நாள்களக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை நிலவும்.

25.02.2025ல் அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும்.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

21-02-2025 முதல் 23-02-2025 வரை: தமிழகத்தில் அடுத்த மூன்று தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 - 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதற்கடுத்த இரண்டு தினங்களுக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஓட்டி காணப்படும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

இன்று (21-02-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (22-02-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 ° செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.

கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு சாா்பில், மன்னாா்குடியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கட்டுமானத் தொழிலுக்கு பயன்படும் பி.... மேலும் பார்க்க

காளியம்மாள் குறித்த கேள்விக்கு சீமான் பதில்

காளியம்மாள் கட்சியிலிருந்து விலகுவதாக வந்த தகவல் குறித்து கேள்விக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்... மேலும் பார்க்க

காட்பாடியில் சாலையோரம் நின்றிருந்த கல்லூரிப் பேருந்தில் தீ!

வேலூர் மாவட்டம் காட்பாடியில், சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கல்லூரிப் பேருந்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.காட்பாடி அடுத்த சேர்காடு கிராமப் பகுதியில், ... மேலும் பார்க்க

ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்று வரும் பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்ச்சியில், ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.... மேலும் பார்க்க

பெற்றோரை கொண்டாடுவோம் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின்! அப்பா செயலி வெளியீடு!!

கடலூரில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். விழாவில், அப்பா என்ற செயலியையும் முதல்வர் வெளியிட்டார்.தமிழ்நாடு மாநிலப் பெற்ற... மேலும் பார்க்க

நாதகவில் இருந்து விலகுகிறாரா காளியம்மாள்?

நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைகளுக்க... மேலும் பார்க்க