செய்திகள் :

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 16 மாவட்டங்களில் மழை!

post image

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்ககக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணாக, இன்று(நவ. 1) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையும் படிக்க: சென்னை: கிளாம்பாக்கம் வரும் பயணிகளுக்காக சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம்!

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலுர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக செயற்குழுக் கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்?

விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.கட்சியின் அடுத்தகட்ட நகர்வு தொடர்பாக ஆலோசனை செய்வதற்கான கூட்டம், பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14,000 கன அடியாக அதிகரிப்பு!

பென்னாகரம்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது.கர்நாடக மாநில கரையோர நீர்ப்பிடிப்புப் பகுதியில்... மேலும் பார்க்க

திருச்சிற்றம்பலம் இயக்குநருடன் இணைந்த மாதவன்!

திருச்சிற்றம்பலம் படத்தின் இயக்குநர் மித்ரன் கே. ஜவஹர் இயக்கும் புதிய படத்தில் மாதவன் இணைந்துள்ளார்.யாரடி நீ மோகினி படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் மித்ரன் கே. ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம்... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

இன்று(நவ. 3) காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.50 அடியில் இருந்து 107.32 அடியாக குறைந்துள்ளது.காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வ... மேலும் பார்க்க

உதகை மலை ரயில் இன்று ரத்து!

உதகை மலை ரயில் சேவை இன்று(நவ. 3) ஒருநாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் புதுவை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வ... மேலும் பார்க்க