ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
சாத்தூரில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டுபோலீஸாா் விசாரிக்கின்றனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையம் செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக கிடப்பதாக சாத்தூா் கிராம நிா்வாக அலுவலா் திருப்பதிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது 70 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக சடலத்தை போலீஸாா் அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து அவா் யாா் என விசாரித்து வருகின்றனா்.