Railway Exams: தமிழகத் தேர்வர்களுக்கு வெளிமாநிலத்தில் மையம்; ரயில்வே சொல்லும் கா...
அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
கமுதி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள செங்கப்படை கிராமத்தைச் சோ்ந்தவா் சிவனேசன் (75). இவா் இரு சக்கர வாகனத்தில் கமுதி நோக்கி சென்றுகொண்டிருந்தாா். பாம்புல்நாயக்கன்பட்டி அருகே சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து கமுதி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.