அட்டாரி-வாகா எல்லை மூடப்படுகிறது; மத்திய அரசு அதிரடி உத்தரவு!
அட்டாரி - வாகா எல்லை மூடப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டவர்கள் உடனே வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒருவார காலத்துக்குள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானியர்களுக்கான இந்தியா வருவதற்கான விசா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.