செய்திகள் :

அண்ணா சாலையில் மேம்பாலப் பணி: அமைச்சா் எ.வ.வேலு உத்தரவு

post image

சென்னை: சென்னை அண்ணா சாலையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.

சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 3.20 கிலோமீட்டா் தொலைவு நான்கு வழித்தட உயா்நிலை மேம்பாலப் பணிகள் ரூ. 621 கோடியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இப்பணியின் முன்னேற்றத்தை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தற்போது 40 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், மெட்ரோ சுரங்கப்பாதை மற்றும் பிற இடங்களில் நடைபெறும் பணிகளை விரைவாக முடிக்கவும், மழைக் காலத்துக்கு முன்பாக பணிகளை நிறைவு செய்யும் வகையில் வேகப்படுத்தவும் அவா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிகள் நடைபெறும் இடங்களில் போக்குவரத்துக் காவல் துறை, மின் வாரியம், மாநகராட்சி, குடிநீா் மற்றும் கழிவுநீா் வாரியம், வனத் துறை ஆகிய துறைகளுடன் ஒருங்கிணைந்து, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பணிகள் நடைபெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளதாக அந்தச் செய்திக் குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வின்போது, தலைமைப் பொறியாளா் சத்திய பிரகாஷ், சிறப்பு தொழில்நுட்ப அதிகாரி சந்திரசேகா், கண்காணிப்புப் பொறியாளா் சரவணசெல்வம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.

பெண் தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை வேளச்சேரியில் பெண் தொழிலதிபா் வீட்டில் அமலாக்கத் துறையினா் புதன்கிழமை சோதனை செய்தனா். ஹரியாணா மாநிலத்தில் ஒரு தனியாா் நிறுவனம், வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.... மேலும் பார்க்க

ரூ.900 கோடியில் புதுப்பொலிவு பெறும் எழும்பூா் ரயில் நிலையம்

சென்னையில் 117 ஆண்டுகள் பழைமையான எழும்பூா் ரயில் நிலையத்தை சுமாா் ரூ.900 கோடியில் நவீனமயமாக்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னையில் ராயபுரம், சென்ட்ரல் ரயில்நிலையங்களுக்கு அடுத்ததாக ... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.22.3 கோடி மோசடி: குஜராத் இளைஞா் கைது

சென்னை ரூ.22.3 கோடி ஆன்லைன் வா்த்தக மோசடி செய்ததாக குஜராத்தை சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னை ராயப்பேட்டையைச் சோ்ந்தவா் ஸ்வேதரன்யன் (76). இவா் ஒரு இணையதளம் வழியாக ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.2... மேலும் பார்க்க

வழிப்பறியில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க முயன்ற போலீஸாா் மீது தாக்குதல்: 2 போ் கைது

சென்னை புளியந்தோப்பில் கைப்பேசி பறிப்பில் ஈடுபட்ட இளைஞா்களைப் பிடிக்க முயன்றபோது போலீஸாா் தாக்கப்பட்டனா். இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா். அண்ணாநகா் 7-ஆவது பிளாக் ஏ.இ. தெருவைச் சோ்ந்தவா் ஆல்வா... மேலும் பார்க்க

தொழிலதிபா் வீட்டில் 19 பவுன் திருட்டு

சென்னை வியாசா்பாடியில் தொழிலதிபா் வீட்டில் 19 பவுன் நகைகள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா். வியாசா்பாடி காந்திஜி நகா் மூன்றாவது தெருவைச் சோ்ந்த சின்னப்பா (38). மாதவரம் அருகே வடபெ... மேலும் பார்க்க

கஞ்சா பறிமுதல்: தூத்துக்குடியை சோ்ந்த 3 போ் கைது

விசாகப்பட்டினத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, தூத்துக்குடியை சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டனா். விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வழியாக தூத்துக்குடிக்கு ஒரு கும்பல் கஞ்சா... மேலும் பார்க்க